ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடியில் ஐந்து வெள்ளி கிழமைகள் வருவதுதான் சிறப்பு. ஆடி வெள்ளியில் அம்மனுக்கு கூழ் செய்து வணங்கினால் அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள். ஆடியில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்வது பழக்கம். வீட்டில் சுமங்கலி பூஜை செய்வதும் சிறப்பு. வர லட்சுமி விரதம் இந்த மாதம்தான் வருகிறது. ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவதும் விசேச பலன்களை தரும்.
அம்மனுக்கு கூழ் செய்வது எப்படி?
ராகி தானியம் வாங்கி வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து பயன்படுத்தலாம் அல்லது சுத்தமான ராகி மாவு பாக்கெட்டாக கடைகளில் கிடைக்கிறது அதனையும் பயன்படுத்தலாம். ஒரு பங்கு மாவிற்கு மூன்று பங்கு நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். இதனை அடுப்பில் வைத்து கிண்டவும். மாவின் நிறம் மாறி இறுகி வரும். தண்ணீரில் கை வைத்து மாவில் தொட்டால் ஒட்டக் கூடாது. இறக்கி வைத்து விடவும். ஆறிய பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், மோர் சேர்த்து கரைக்கவும். கூழ் தயாரானதும் அம்மனுக்கு படைக்கும் முன் வேப்பிலை சேர்த்து படைக்கவும். உப்பு சேர்ப்பது இல்லை. பக்தர்களுக்கு தரும் போது வேண்டுமானால் உப்பு சேர்த்து தரலாம்.
குல தெய்வத்திற்கு மாவிளக்கு
பச்சரிசியை ஈரமாவு திரிக்கும் மெஷினில் தந்து அரைத்துக் கொள்ளவும். கால் கிலோ அரிசி எனில் கால் கிலோ நாட்டுச்சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். ஒரு அகண்ட பாத்திரத்தில் மாவையும் சர்க்கரையையும் கொட்டி ஏலக்காய், பச்சை கற்பூரம் சிறிதளவு பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும். லேசாக தண்ணீர் தெளித்து இறுக்கமாக பிசைந்து குவித்து பிடித்து வைக்கவும். நடுவில் குழி செய்து திரி போட்டு, நெய் ஊற்றி விளக்கை தயார் செய்யவும். விளக்கில் குங்குமப்பொட்டு வைத்து , பூ வைத்து சாமி முன் குல தெய்வத்தை நினைத்து விளக்கேற்றவும். இதனை ஆடி வெள்ளியில் வீட்டிலேயே செய்யலாம். குலதெயவம் குலம் காக்கும்.
திருவிளக்கு பூஜை
ஆடி வெள்ளியில் சுமங்கலிகள் திருவிளக்கு பூஜை செய்வதும் குடும்பத்திற்கு நல்லது. இதனையும் வீட்டிலேயே செய்லாம். குத்துவிளக்கு குறைந்த பட்சம் இரண்டு முகமாவது தீபமேற்றி , குங்கும அர்ச்சனை செய்து தேவியின் அருளைப்பெறலாம்.
முதல் பக்தன்... ஆடி மாத அம்மன் தரிசனம் கிடைத்தது
ReplyDeleteவணக்கம் வருகைக்கு நன்றி.
ReplyDeleteஆடிமாதம் நம்மை ஆண்டவனுக்கு
ReplyDeleteஅர்பணித்துக்கொள்ளும் மாதம் என்றால் மிகையாகாது
அதனால்தான் நாம் முழுமையாக நம்மை
ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்பதனால்தான்
இந்த மாதங்களில் லௌகீக காரியங்களை
முற்றிலுமாக முன்னோர்கள் விலக்கி வைத்துள்ளார்கள்
என நினைக்கத் தோன்றுகிறது
ஆடிமாதத்திற்குரிய அனைத்து விஷேஷ் நாட்களையும்
மிக அழகாக அடுக்கி கொடுத்துள்ளீர்கள்.நன்றி
தொடர்ந்து வருகிறேன் தொடர வாழ்த்துக்கள்
எதை எழுதினாலும் நன்றாக எழுதுகிறிர்கள். வாழ்த்துகள்.( நீங்கள் புத்தக புழுவா அல்லது அருகில் உள்ளவர்களிடம் சோசியலாக பழக கூடிய பேராசிரியாரா?)நன்றி
ReplyDeleteதொடர்ந்து வருகிறேன்
இங்கேயும் கவனிப்பதற்கு நன்றி ரமணி சார்.
ReplyDeleteஇங்கேயும் கவனிப்பதற்கு நன்றி ரமணி சார்.
ReplyDeleteஇரண்டுமே இல்லை. என்னை சுற்றி ரசனை மிக்க பெரிய குடும்பம் இருக்கிறது என்பதுதான் உண்மை. எல்லா விசயங்களும் உணவருந்தும் போது , வேலைக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்படும். மனோதத்துவமும், சில நாவல்களும் மட்டுமே நான் படிப்பது. Thank you Mr. Tamilguy.
ReplyDelete